இந்தியாவில் விமான சேவை அதிகரித்தாலும் கட்டணக் கொள்கையால் நஷ்டம்: ஐஏடிஏ

ஜெனீவா: இந்தியாவில்விமான சேவை யின் தேவை அதிகரித்தாலும், விமான கட்டண கொள்கையால் நிறுவனங்களுக்கு  இழப்பை ஏற்படுத்துகிறது என, சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர்  அலெக்சாண்டர் டி ஜூனியாக் கூறினார்.

 சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐஏடிஏ) தலைவர் அலெக்சாண்டர் டி ஜூனியாக் அளித்த பேட்டியில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடையே கட்டண போட்டி, விமான சேவையின் தேவையை  அதிகரித்துள்ளது.

இருப்பினும் விமான கட்டணம் தொடர்பான கொள்கைகள் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை. ஆனால், வரி விதிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்றவை விமான  நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இது விமான கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தி விடுகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: