ரஞ்சி: தோல்வியின் பிடியில் தமிழகம்

சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான லீக் போட்டியில் தமிழக அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. சண்டிகரில் நடக்கும் இப்போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 215 ரன்னில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களுடன் இருந்தது. சுப்மன் கில் 199, மன்தீப் சிங் 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில், மன்தீப் 50 ரன்னுடன் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்து, 268 ரன்கள் எடுத்து வெளியேறினார். குர்கீரத் சிங் 48, யுவராஜ் சிங் 41 ரன் எடுத்தனர். பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 479 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

264 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணிக்கு முகுந்த், ஜெகதீசன் நல்ல தொடக்கம் தந்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த நிலையில் ஜெகதீசன் (50) விக்கெட்டை வீழ்த்திய யுவராஜ் சிங், அடுத்த பந்திலேயே அபராஜித்தை கோல்டன் டக்காக்கி தமிழகத்துக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதைத்தொடர்ந்து முகுந்த் 74 ரன்னில் சந்தீப் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இந்திரஜித் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆட்டத்தின் கடைசி நாளான இன்று, கைவசம் 7 விக்கெட்டுடன் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே தமிழக அணி 98 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: