ஆட்டோமொபைல்

அசத்தலான ஸ்டைலில் இரண்டு புதிய பைக்குகள்

அமெரிக்காவை சேர்ந்த ‘’இந்தியன்’’ நிறுவனம் க்ரூஸர் ரக மாடல் தயாரிப்பில் புகழ்பெற்றது. தற்போது இந்நிறுவனம், தனது FTR 1200S மற்றும் FTR 1200S ரேஸ் ரெப்லிக்கா என்ற ஸ்ட்ரீட் பைட்டர் ரகத்திலான  இரண்டு புதிய மாடல்களையும் முதல்முறையாக கொண்டு வந்துள்ளது. 2016ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட பிளாட் டிராக் ரேஸ் பைக்குகளின் டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட FTR  750 ஸ்கவுட் ரேஸ் என்ற பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன், இந்தியன் நிறுவனத்தின் FTR 1200 எஸ் மற்றும் FTR 1200 எஸ் ரேஸ் ரெப்லிக்கா ஆகிய இரண்டு மாடல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Advertising
Advertising

இந்தியன் எப்டிஆர் 1200 எஸ் பைக்கில் கருப்பு வண்ண பிரேமும், ரேஸ் ரெப்லிக்கா மாடலில் சிவப்பு வண்ண ட்ரெல்லிஸ் பிரேமும் பயன்படுத்தப்பட்டு இருப்பதுதான் இரு மாடல்களுக்கு இடையிலான முக்கிய வித்தியாசம். இந்த  பைக்குகளில் 1,203 சிசி வி-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன்கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்  இணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு பைக்குகளிலுமே 4.3 அங்குல எல்சிடி தொடுதிரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத் மூலமான இணைப்பு மற்றும் யுஎஸ்பி குயிக் சார்ஜர் வசதியும்  உள்ளன.

இந்த பைக்குகளில் வண்டியின் நகர்வு மற்றும் இயக்கத்தை துல்லியமாக கண்காணித்து கட்டுப்படுத்தும் ஐஎம்யூ சாதனம், டிராக்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பாஷ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், க்ரூஸ்  கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்தியன் FTR 1200 பைக்குகளில் முன்புறத்தில் 120/70 R19 அளவிலும், பின்புறத்தில் 150/80 R18 அளவுடைய டன்லப் DT3-R ரேடியல்  டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் முன்புறத்தில் 43 மிமீ இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் போர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் பிக்கிபேக் ஐஎப்பி சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டு மாடல்களின் முன்சக்கரத்தில் 320 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 265 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியன் FTR 1200  S பைக் ₹14.99 லட்சத்திலும், FTR 1200 S ரேஸ் ரெப்லிக்கா பைக் 15.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். ₹2 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். அடுத்த ஆண்டு  ஏப்ரலில் டெலிவரி செய்யப்படுகிறது. இவ்விரு புதிய பைக் மாடல்களும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

பவர்புல் ஹைப்பர் காரை தயாரிக்கும் பினின்பரீனா

இந்தியர்கள் பயன்படுத்தும் சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான உலகின் அதிக சக்திவாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாக புகாட்டி சிரோன் விளங்குகிறது. இந்த காரில், 1,500 பிஎஸ் (1479 பிஎச்பி) பவரையும், 1,600 என்எம் டார்க்  திறனையும் வெளிப்படுத்தும் W16 இன்ஜின் பயன்படுத்ததப்படுகிறது.  இந்நிலையில்,இதை விட அதிக சக்திவாய்ந்த ஹைப்பர் கார் மாடலை மஹிந்திராவின் கீழ் செயல்படும்் இத்தாலியை சேர்ந்த பினின்பரீனா நிறுவனம்  உருவாக்கி வருகிறது. PF0 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இப்புதிய கார், பேட்டரியில் இயங்கும் மின்சார மாடலாக உருவாக்கப்படுகிறது. இந்த காரின் 4் சக்கரங்களில் பொருத்தப்பட இருக்கும் 4 மின்மோட்டார்களும்  அதிகபட்சமாக 1,900 பிஎஸ் பவரையும், 2,300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை படைத்தது. பெட்ரோலில் இயங்கும் புகாட்டி சிரோன் காரைவிட இந்த பேட்டரி ஹைப்பர் கார் 420 பிஎஸ் கூடுதல் பவரை  வெளிப்படுத்தும்.

 

இந்த காருக்கான டிரான்ஸ்மிஷனை குரோஷியாவின்  ரிமாக் சூப்பர் கார் நிறுவனம்் தயாரித்துள்ளது. இதன் மின் மோட்டார்களும். டிரான்ஸ்மிஷன் செயல்திறனும் அசத்துகின்றன. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை 2  வினாடிகளிலும், 300 கி.மீ வேகத்தை 12 வினாடிகளிலும் எட்டிவிடும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் கார் 482 கி.மீ தூரம் ஓடும். குயிக் சார்ஜர் மூலமாக 25 - 40 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும். காரில்,  கார்பன்பைளபர் பாடி மற்றும் சேஸீ பயன்படுத்தப்படுகிறது. ஆக்டிவ் ரியர் விங் அமைப்பு, இந்த காருக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள பைரெல்லி நிறுவனத்தின் PZero டயர்கள் ஆகியவை முக்கிய அம்சங்கள். மொத்தமாக 150  கார்கள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை தொடர்ந்து, சொகுசு வகை மின்சார கார்களையும் பினின்பரீனா தயாரிக்க உள்ளது. எதிர்காலத்தில் இந்த கார்கள் மஹிந்திரா  மூலமாக இந்தியாவிலும் விற்பனைக்கு வர வாய்ப்பு அதிகம். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

மிரட்டலான கேடிஎம் 790 ட்யூக்

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் வரிசை பைக் மாடல்கள் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவை. சக்திவாய்ந்த இன்ஜின், மிரட்டலான டிசைன் மற்றும் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதே இதற்கு காரணம்.  தற்போது கேடிஎம் 125 ட்யூக், 200 ட்யூக், 250 ட்யூக், 390 ட்யூக் மாடல்கள் விற்பனையில் உள்ளன. இந்த வரிசையில் சக்திவாய்ந்த மாடலையும் கேடிஎம் இந்தியாவில் மார்ச்சுக்குள் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது.

இந்த பைக்கில் 799சிசி LC8c பேரலல் ட்வின் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.  ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.   முன்புறத்தில் WP 43 மி.மீ அப்சைடு டவுன் போர்க்குகளும், பின்புறத்தில் WP மோனோ ஷாக் அப்சார்பரும், 17 அங்குல சக்கரங்களும்் இடம்பெற்றுள்ளன.

முன்சக்கரத்தில் இரண்டு 300 மி.மீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 240 மி.மீ டிஸ்க் பிரேக்குகளும், பாஷ் நிறுவனத்தின் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட், டிஎப்டி திரையுடன்  இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரைடு பை ஒயர் சிஸ்டம், லான்ச் மற்றும் டிராக்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் என நான்குவிதமான டிரைவிங்  மோடுகளும் உள்ளன. இந்த பைக், 169 கிலோ எடை கொண்டது. 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இப்புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் ₹7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: