உலகம் பலவிதம்

கிறிஸ்துமஸ் அணிவகுப்பு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் டாக்யூக் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக பிரமாண்ட அணிவகுப்பு நடத்தப்பட்டது. 3.5 கிமீ தூரம் நடந்த இந்த அணிவகுப்பில் பெரிய, பெரிய பலூன் பொம்மைகள்  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. உலகிலேயே மிக நீண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது மணிலாவில்தான். இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதமே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.

பிரான்சில் பதற்றம்

பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் பெரும் புரட்சியாக உருவெடுத்துள்ளது. வார இறுதியில் நடக்கும் இப்போராட்டத்தில் வன்முறைகள் அதிகரித்தபடி உள்ளன. தலைநகர் பாரீசில்  போராட்டக்காரர்கள் கொளுத்திய வாகனங்களால் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.

ஆர்டிக்கில் உருகும்பனிப்பாறைகள்

உலக வெப்பமயமாதலால், ஆர்டிக் கடலில் உள்ள பனிப்பாறைகள் வெகுவேகமாக கரைந்து வருகின்றன. இங்குள்ள சுக்சி கடல் பகுதியில் பனிப்பாறைகள் உருகி தண்ணீரில் மிதக்கின்றன. இது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது. பனிப்பிரதேசமான ஆர்டிக்கில், குளிர்காலத்தில் இதுபோல் பனிப்பாறைகள் உருகியதே கிடையாது. மேற்கு அண்டார்டிகாவை போல ஆர்டிக்கிலும் பனிப்பாறைகள் உருகுவது, இயற்கை நமக்களிக்கும் எச்சரிக்கை என  ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

102 வயது பாட்டி சாதனை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த102 வயது மூதாட்டி இர்னே ஓஷியா, ஸ்கை டைவிங்கில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நரம்பியல் நோய் சிகிச்சைக்காக நிதி திரட்டுவதற்காக, 14 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாராசூட்  உதவியுடன் விமானத்திலிருந்து கீழே குதித்துள்ளார். அவருடன்,  ஸ்கைடைவிங்கில் 10 ஆண்டு அனுபவம் கொண்ட ஜெட் ஸ்மித் என்பவரும் இணைந்து குதித்தார். முதல் முறையாக தமது 100வது வயதில் ஸ்கை டைவிங்  செய்த இர்னே, தற்போது ஸ்கை டைவிங் செய்த அதிக வயதான பெண் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அலாஸ்காவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்காவில் அடுத்தடுத்த 2 நில நடுக்கத்தால் வாஸில்லா பகுதியில் சாலை பெயர்ந்து கிடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: