பொருளாதார வளர்ச்சி அடுத்தடுத்து சவால்கள் : அருண்ஜெட்லி எச்சரிக்கை

புதுடெல்லி: பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க இந்தியாவை ெபாறுத்தவரை போராட்டம் தான்; அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை அளவை 3.3 சதவீதம் அளவை அரசு தக்க வைக்கும். அதை அதிகரிக்க விடாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், வளர்ச்சி விகிதத்தையும் 7 - 8க்குள் வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

உலக அளவில் உள்ள சவால்களை சமாளித்து வளர்ச்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறோம். வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக இந்தியா போன்ற பெரிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியை சமாளிப்பது  என்பது கடினம் தான். இரண்டு இலக்க நிதி பற்றாக்குறை ஏற்படுமானால், அதை சமாளிப்பது மிகவும் கஷ்டமானது. அடுத்த சில ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் (ஜிடிபி) பிரிட்டனை இந்தியா மிஞ்சும் என்று எதிர்பார்க்கிறோம். கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகளில் நாம் தான் முன்னணியில் இருக்கிறோம். அதன் நிதி சுமையை சமாளிப்பது என்பது நமக்கு உள்ள இன்னொரு முக்கிய சவால். பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை இது வகிக்கிறது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: