காய்கறிகள், பெட்ரோல் விலை குறைவு எதிரொலி : மொத்த விலை பணவீக்கம் குறைந்தது

மும்பை : மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் கடந்த மாதத்தில் 4.64% ஆக குறைந்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 5.28% ஆக இருந்த நிலையில், இப்போது பணவீக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய புள்ளி விவர துறை தகவல் அளித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம்  கடந்த ஆண்டின் நவம்பரில் 4.02% ஆக இருந்தது. தற்போது பண வீக்கம் கணிசமாக வீழ்ச்சி அடைய உணவு பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை குறைவே காரணம் ஆக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைந்ததால் நவம்பர் மாதத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் 14. 28% ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்ததன் எதிரொலியாக டீபிலேஷன் எனப்படும் பணவாட்டம் மதிப்பும் 26. 98% ஆக குறைந்தது. இந்த காரணங்களால் மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத வகையில் நவம்பர் மாதத்தில் 4.64% ஆக குறைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: