இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்: பெட்ரோல் 5 காசுகள் உயர்வு, டீசல் 8 காசுகள் குறைவு

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,15) காலை அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது.

தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. ரூ.86-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82-க்கு விற்பனை ஆனது. 80 ரூபாயை தாண்டி விற்பனையான டீசலும் ரூ.68.26 என்ற அளவுக்கு குறைந்தது. இதன் அடிப்படையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.72.99 ஆக விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ரூ.68.10க்கு விற்றபனை செய்யப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: