தமிழகத்தை போல் பிற மாநிலங்களில் அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த திட்டம் : நிதி ஆயோக் அதிகாரிகள் தமிழக டாக்டர்களுடன் ஆலோசனை

சென்னை: நிதி ஆயோக் அதிகாரிகள் குழுவினர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவை பார்வையிட்டு டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம், விபத்து இறப்பு விகிதம் ஆகியவை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவு. இதற்காக மத்திய அரசு தமிழக சுகாதாரத்துறைக்கு விருது வழங்கி வருகிறது.  திட்டக்குழுவுக்கு மாற்றாக, மத்தியில் மோடி அரசு பதவியேற்றதும் நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழக அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிக்சைப்பிரிவை பார்வையிட்டு, இங்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை பிற மாநிலங்களில் செயல்படுத்த திட்டமிட்டனர்.

அதற்காக நிதி ஆயோக்கை சேர்ந்த டாக்டர் வெங்கட்ராமன் 5 அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். தாம்பரம் அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவின் செயல்பாடுகளை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி, அதிகாரிகள் அவசர சிகிச்சைப்பிரிவின் செயல்பாடு, 108 அவசர உதவி ஆம்புலன்ஸ் சேவை செயல்பாடு, நோயாளியை காப்பாற்றுவதில் துரிதமாக செயல்படுதல் ெதாடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கினர்.

 இதுதொடர்பாக நிதி ஆயோக் குழுவின் டாக்டர் வெங்கட்ராமன் கூறுகையில், ‘‘தமிழகம் சுகதாரத்துறையில் சிறந்து விளங்குகிறது. அவசர சிகிச்சை பிரிவின் இங்குள்ள நடைமுறைகளை, சுகாதார கட்டமைப்பின் பின்தங்கிய மாநிலங்களிலும் அமல்படுத்த பரிந்துரை அளிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறையை பின்பற்றி, பிற மாநிலங்களிலும் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: