மைனர் பெண்ணுக்கு திருமணம் பெற்றோர் சிறையிலடைப்பு

கீழ்ப்பாக்கம்: ஓட்டேரியை சேர்ந்த தம்பதி செல்வகுமார், பாரதி ஆகியோரின் மகள்  ராணி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராணிக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மகன் தினகரன் (20) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மைனர் பெண் என்பதால் அழைப்பிதழ் அச்சடிக்கப்படவில்லை.  இருவீட்டார் திட்டமிட்டபடி அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பெற்றோர்களே முன்னின்று நேற்று காலை திருமணம் நடத்தி வைத்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி, கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் அவர்கள் ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். மணமகன், மணப்பெண் சான்றிதழ்களை சரி பார்த்தபோது பெண்ணின் வயது 16 என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மணமகள் பெற்றோர் செல்வகுமார், பாரதி, மணமகனின் தந்தை அர்ஜூனன் ஆகிய 3 பேரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி மற்றும் மணமகனை எச்சரித்து அனுப்பின

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: