கால்வாயை முறைப்படி சுத்தம் செய்வதாக முதல்வர் தனிப்பிரிவை ஏமாற்றும்: பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள்: பொதுமக்கள் வேதனை

சென்னை: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம், திருமுருகன் நகர், முதல் தெருவில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் கால்வாயை நகராட்சி ஊழியர்கள் முறையாக சுத்தம் செய்வது இல்லை. இதனால், கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள், முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளித்தனர். இதன் எதிரொலியாக, கடந்த மாதம் 10ம் தேதி நகராட்சி ஊழியர்கள் கால்வாயின் ஒரு பகுதியை சுத்தம் செய்தனர். பின்னர், மேற்கண்ட கால்வாயை அவ்வப்போது சுத்தம் செய்து, கொசு மருந்து அடிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, நகராட்சி நிர்வாகம் முதல்வரின் தனிப்பிரிவில் தெரிவித்துள்ளது.

இதுபற்றி புகார்தாருக்கு முதல்வரின் தனிப்பிரிவு தெரியப்படுத்தி உள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகம் உறுதியளித்தபடி அவ்வப்போது கால்வாயை சுத்தம் செய்யவில்லை. இதனால், தற்போது அந்த சாலையில் மீண்டும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும், இப்பகுதியில் மாடு வளர்ப்போர், பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல், கால்வாயில் சாணக் கழிவுகளை வெளியேற்றுவதால் இப்பகுதியே அசுத்தமாக காணப்படுகிறது. எனவே, இப்பகுதிக்கு நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: