டிரஸ்ட் மருத்துவமனையில்இலவச மருத்துவ முகாம்

சென்னை: சென்னை அயனாவரம் மேடவாக்கம் டேங்க் ரோட்டில் அமைந்துள்ள டிரஸ்ட் மருத்துவமனையில் சீனியர் மருத்துவர் பேராசிரியர் எம்.எஸ்.அமரேசன் தலைமையில் பிரதி மாதம் 3வது ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச மருத்துவ முகாம், காலை 8 மணி முதல், மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், சிறுநீரக கோளாறு ஆகியவற்றுக்கு டாக்டர்கள் ஆர்.கீதா, குமரன் அமரேசன், ரஞ்சனா குமரன், ராஜதிலகம் ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். முழு உடல் பரிசோதனை, சிறுநீர், ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, டயாலிசிஸ் ஆகியற்றுக்கு கட்டண சலுகை உண்டு. மேலும் விவரங்களுக்கு 044-26461722, 9444360846 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: