தாம்பரம் புது மார்க்கெட் சாலையில் கிடப்பில் மழைநீர் கால்வாய் பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி

தாம்பரம்: தாம்பரம் புது மார்க்கெட் சாலையில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாயால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தாம்பரம் நகராட்சி 35வது வார்டுக்கு உட்பட்ட புது மார்க்கெட் சாலையில் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆனால் அந்த பணிகள் முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் இருப்பதினால் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.  கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி அப்பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பின்னர் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தினசரி மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் அதில் விழுந்து செல்கின்றனர். இந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே கால்வாய் பணிகளை விரைந்து முடித்து அங்குள்ள பள்ளங்களை மூடவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் விபத்தில் சிக்காமல் இருக்கவும் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி பொதுமக்களை கொசு தொல்லையில் இருந்து காத்திட வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: