எதிர் திசையில் அசுர வேகத்தில் இயக்கியதால் கார் மீது மாநகர பஸ் மோதி மூதாட்டி உடல் நசுங்கி சாவு

* டாக்சி டிரைவர் கை, கால் துண்டானது

* மெரினா காமராஜர் சாலையில் பரபரப்பு

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் எதிர் திசையில் அசுர வேகத்தில் இயக்கிய மாநகர பேருந்து, கால்டாக்சி மீது மோதிய விபத்தில் மூதாட்டி உடல் நசுங்கி உயிரிழந்தார். கீழ்ப்பாக்கத்தை ேசர்ந்தவர் ஹேமலதா (74). இவர், நேற்று காலை, தனது பேத்தி ஆனந்தவல்லி (23)  என்பவருடன் அடையாறில் உள்ள பல் மருத்துவமனைக்கு, கால் டாக்சியில் சென்று கொண்டிருந்தார். கால் டாக்சியை வெங்கடேசன் (29) என்பவர் ஓட்டினார்.மெரினா காமராஜர் சாலையில் மாநில கல்லூரி அருகே கார் வரும்போது, கேளம்பாக்கத்தில் இருந்து மாநகர பேருந்து (த.எண் 109) பிராட்வே நோக்கி வந்தது. அப்போது, முன்னால் ெசன்ற வேனை முந்தி செல்ல மாநகர பேருந்தை டிரைவர்  ராஜேந்திரன் எதிர் திசையில் அசுர வேகத்தில் இயக்கினார்.

அப்போது, எதிரே வந்த கால்டாக்சி மீது பயங்கர மாக பேருந்து மோதியது. கால்டாக்சி மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் அப்பளம் போல் நொறுங்கியது. கால்டாக்சி டிரைவர் வெங்கடேசன், பின் இருக்கையில் அமர்ந்து வந்த ஹேமலதா, ஆனந்தவல்லி ஆகியோர் படுகாயமடைந்தனர். கால்டாக்சி டிரைவருக்கு ஒரு கை, ஒரு கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் மெரினா கடற்கரையில் இருந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனரை பிடித்து அடிக்க பாய்ந்தனர். பொதுமக்கள் ஒன்று கூடுவதை கவனித்த இருவரும் அங்கிருந்து தப்பினர். பிறகு படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்து 30 நிமிடங்கள் கழித்துதான் சம்பவ இடத்திற்கு வந்தது. அதற்குள் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு ராயப்ேபட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மூதாட்டி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் உட்பட இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாநகர பேருந்து டிரைவர் ராஜேந்திரன் (35) என்பவரை கைது ெசய்தனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: