×

அங்கன்வாடி சேவைக்கு 5 அடுக்கு கண்காணிப்பு

புதுடெல்லி: மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறை அமைச்சர் வீரேந்திர குமார் அளித்த பதிலில், ‘‘ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்(ஐசிடிஎஸ்) திட்டம் அங்கன்வாடி சேவைகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. அங்கன்வாடி செயல்பாடுகளை மேம்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் 5 அடுக்கு கண்காணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : r Anganwadi Services
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...