×

இந்தியாவில் முதல் முறையாக புனே மருத்துவமனையில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு பெண்ணுக்கு பிறந்தது குழந்தை

புனே: புனே மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதலாவது கருப்பை மாற்று குழந்தை பிறந்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த குழந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம், பாரூச் அருகே உள்ள ஜாம்புசாரில் வசித்து வருபவர் மீனாட்சி வாலண்ட் (28). தொடர்ந்து சுத்தம் செய்தது மற்றும் பிற தொற்றுகள் காரணமாக இவருடைய கருப்பை சேதமடைந்து விட்டது. இதனால் மாதவிடாய் மற்றும் கர்ப்பமாதல் ஆகியவை பாதிக்கப்பட்டு அவரால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து மீனாட்சி கடந்த ஆண்டு புனேயில் உள்ள கேலக்சி கேர் மருத்துவமனையை அணுகி ஆலோசனை கேட்டார். அவருடைய உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த ஆண்டு மீனாட்சிக்கு இந்த மருத்துவமனையில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதுதான் இந்தியாவிலேயே முதலாவது கருப்பை மாற்று அறுவை சிகிச்சை ஆகும். இந்த நிலையில் கருப்பை மாற்றப்பட்ட மீனாட்சி வெற்றிகரமாக கர்ப்பம் தரித்து அவருக்கு 2018 அக்டோபர் 18ம் தேதி பெண் குழந்தை பிறந்ததாக அவருக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை ெசய்த டாக்டர் சைலேஷ் புந்தம்பேகர் தெரிவித்தார். எனினும் குழந்தையின் எடை 1.45 கிலோ மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்தார். பெண் குழந்தைக்கு ராதா என பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு மீனாட்சியும் குழந்தை ராதாவும் நேற்றுமுன்தினம மருத்துவமனையில் இருந்து  வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது குழந்தையின் எடை 2.65 கிலோ இருப்பதாக  டாக்டர் புந்தம்பேகர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்படும்போது மன நெகிழ்ச்சியுடன் மீனாட்சி காணப்பட்டார். அவர் கூறும்போது, “எனக்கு குழந்ைத பிறக்கும் என்று நினைக்கவே இல்லை. இப்போது மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். பத்து மாதங்களுக்கு பிறகு குழந்தையுடன் வீட்டுக்கு செல்கிறேன். மருத்துவமனையில் இருக்கும்போது சொந்த வீட்டில் இருப்பதைப் போலவே உணர்ந்தேன். என் குழந்தைக்கு துணி மணிகளும், ஏராளமான பரிசுகளும் குவிந்துள்ளன” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hospital ,India ,Pune ,replacement surgery , India, Pune hospital, Uterine transplantation, woman, baby
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...