×

மாவட்ட தலைநகரங்களில் உள்ள பொது நூலகங்களில் போட்டி தேர்வு எழுத பயிற்சி மையம்

ஈரோடு: ரூ.72 லட்சம் மதிப்பில்  அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள பொது நூலகங்களில் மாணவர்கள் போட்டி  தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் பொது நூலகர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று ஈரோடு சம்பத் நகரில் நடந்தது. பயிற்சியின் துவக்க விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:  பொது நூலகங்களுக்கு தேவையான கணினி மயமாக்குதல், உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  புதிய நூலகங்கள் அமைக்கவும், பழமை வாய்ந்த புத்தகங்களை குறுந்தகடு வடிவில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 அனைத்து மாவட்டங்களில் உள்ள மத்திய நூலகங்களில் இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூலக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளுதல் என்ற தலைப்பில் இந்த பயிற்சி 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் 102 பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.   தமிழகத்தில் ₹72 லட்சம் மதிப்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள பொது நூலகங்களில் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் முழுநேர கிளை நூலகங்களுக்கு மின் இதழுடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்துதல், ரூ.2 கோடியில் அரிய நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் மின்மயமாக்குதல்போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Training Center for Competition Exams ,district capitals ,libraries , Public Libraries, Competitive Examination, Training Center, Minister Chengottai
× RELATED பொது நூலகத்துறையில் நூல் கொள்முதல் செய்ய இணைய தளம் தொடக்கம்