×

10 லட்சம் பேர் இறந்தால் தான் தமிழகத்திற்கு பிரதமர் வருவாரா? : அமைச்சர் ஆவேசம்

விருதுநகர்: கஜா புயலால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 10 லட்சம் பேர் இறந்தால்தான் பிரதமர் தமிழகத்திற்கு வருவாரா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில், புதிய மகப்பேறு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:கஜா புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது. மத்திய அரசு நிவாரணம் வழங்காமல் பாராமுகமாக இருக்கிறது. வடக்கில் இருப்பவர்கள்தான் வாழ வேண்டும். தெற்கே இருப்பவர்கள் சாக வேண்டும் என நினைக்கிறார்களா? மத்திய குழு அறிவித்த நிவாரணத்தை விட கூடுதல் தொகை வழங்கி, மத்திய அரசு மக்களை பாதுகாக்க வேண்டும்.

அண்டை மாநிலங்கள், வெளிநாடு வாழ் மக்கள் தமிழகத்திற்கு உதவும்போது, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக பாஜ நிர்வாகிகள், பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகம் இந்தியாவின் அங்கமாகத்தான் உள்ளது. புயல் பாதிப்பை காண பிரதமர் வராதது பெரிய வருத்தம் அளிக்கிறது. இதைவிட என்ன பெரிய பாதிப்பு வேண்டும்? 10 லட்சம் பேர் இறந்தால்தான் பிரதமர் தமிழகத்துக்கு வருவாரா?

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறது. தென்மாநில மக்கள் பாதிப்பிற்கு, மத்திய அரசு உதவவில்லை என்றால் அதை தட்டிக்கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு பசிக்கும் நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும். அனைத்தும் தெரிந்த பிரதமரை யாரோ தடுக்கிறார்கள். விருதுநகரில் அறிவித்த பல் மருத்துவக்கல்லூரிக்கான மத்திய அரசின் விதிகள் மாற்றப்பட்டு, விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Minister , Gajah Storm, Minister Rajendra Balaji, Angad
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...