×

பிளாஸ்டிக் தடை அரசாணை ரத்து செய்யக்கோரி வழக்கு : அரசுக்கு நோட்டீஸ்

மதுரை,: பிளாஸ்டிக் தடைக்கான தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், புற்றுநோயும் அதிகரிக்கிறது. தமிழக அரசு கடந்த ஜூன் 25ல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில் இல்லை. குறிப்பாக மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றவில்லை. எந்த வகையான பிளாஸ்டிக் ெபாருட்கள் என்பது குறித்து கூறவில்லை. குறிப்பிட்ட ைமக்ரான் அளவு என சீல் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் குறித்து எதுவும் கூறவில்லை.

வனத்துறையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும்போது, தனியார் விவசாய பணிகளுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இது விவசாயப் பணிகளை பாதிக்கும். மேலும் பால் பாக்ெகட்களில் பயன்படுத்தலாம். குடிநீர் பாக்கெட்களில் பயன்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டிருப்பது பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது. பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பாளர்கள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிப்ெபட்டில் அனுமதி பெற வேண்டுமென்பது அனைத்து உற்பத்தியாளர்களாலும் முடியாது. பரிசோதித்து சான்று பெற குறைந்தது 6 மாதம் வரை தேவைப்படும். பெரிய நிறுவனங்களுக்கே இது சாத்தியம்.மேலும், மத்திய அரசின் சட்டத்தில் உற்பத்தியாளரே தனது தயாரிப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வழிவகை உள்ளது. ஆனால், தமிழக அரசாணையில் இது குறித்தும் கூறப்படவில்லை. எனவே, பிளாஸ்டிக் தடை விதிக்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றவோ, புதிதாக அரசாணை வெளியிடவோ உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அரசு தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 19க்கு தள்ளி வைத்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cancellation , Plastic barrier, cancellation of government, notice to the government
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...