வருமான வரி ரீபண்ட் வரணுமா? : அடிச்சு கேப்பாங்க, அப்பவும் சொல்லாதீங்க

ஆண்டுக்கு ₹2.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுபவர்கள், கூடுதல் வருமானத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும். காப்பீடு, வீட்டு லோன், வைத்திய செலவுகள் இருந்தால் வரியை கழித்து ரீபண்ட் பெறலாம்.

* இதற்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போதே வங்கிக்கணக்கு விவரம் அளிக்க வேண்டும். அதில்்தான் ரீபண்ட் வரவு வைக்கப்படும்.

* ஆனால், வருமான வரித்துறையில் இருந்து அனுப்புவது போல போலியாக அனுப்பி வங்கி டெபிட் கார்டு எண், சிவிவி எண் கேட்கின்றனர். சிலர் போன் மூலமாகவும் இந்த விவரங்களை கேட்கின்றனர்.

 

* இதுகுறித்து வரி செலுத்துவோரின் இ-மெயிலுக்்கு வருமான வரித்துறை அனுப்பிய அறிவிப்பில், ‘‘போலி ரீபண்ட் தகவல்களை பார்த்து ஏமாறாதீர்கள். வருமான வரித்துறை ஒரு போதும் வங்கி டெபிட் கார்டு விவரங்களையோ அதன் பின்புறம் உள்ள சிவிவி எண்ணையோ கேட்பதில்லை எனவே, டெபிட்கார்டு விவரங்களை யார் கேட்டாலும் தராதீர்கள்.

* மேலும் விவரங்களுக்கு www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும். அல்லது, 1800 103 0025 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசியில் இருந்து அழைக்கவும் என தெரிவித்துள்ளது.

* வழக்கமாக வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு அனாமத்து அழைப்புகள் வருகின்றன. பேசுபவர் வங்கி அதிகாரி என கூறிக்கொண்டு, உங்கள் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டுள்ளன. தடையை நீக்க கார்டு எண் பின் நம்பர் சொல்லுங்கள். அதோடு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒரு முறை பாஸ்வேர்டை கூறுங்கள் என கேட்டு அப்பாவிகளின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உருவி விடுகின்றனர். இதேபோல்தான், வரி ரீபண்ட் தருவதாக கூறி திருட மோசடி கும்பல் கிளம்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: