மூலப்பொருட்கள் விலையேற்றம்... இன்ஜி. குறுந்தொழில்கள் பாதிப்பு

கோவை:  கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) நிர்வாக குழு கூட்டம் நேற்று கோவையில் நடந்தது. இதில் இணை தலைவர் மகேஷ்வரன் தலைமை வகித்தார்.இதில் நிறைவேற்றிய தீர்மானங்கள்:ஜிஎஸ்டியால் குறுந்தொழில் கூடங்களில் ஒன்றரை ஆண்டாக 30%ஜாப் ஆர்டர்கள் குறைந்து விட்டன. இன்ஜினியரிங் ஜாப் ஆர்டர் பெறும் குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட 18%  ஜிஎஸ்டியை 5%ஆக குறைக்க வேண்டும். ஆண்டுக்கு ₹20 லட்சத்திற்கும் கீழ் ஜாப் ஆர்டர்கள் பெறும் தொழில் கூடங்களுக்கு ஜிஎஸ்டி முழு விலக்கு அளிக்க வேண்டும்.

இன்ஜினியரிங் பொருள் உற்பத்தி பொருட்களான அலுமினியம், வார்ப் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின்பு, 15 சதவீதம் அளவிற்கு விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால், விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, எம்.எஸ்.மெட்டீரியில் ஜிஎஸ்டிக்கு முன்பு கிலோ ₹45 ஆக இருந்தது. அதற்கு 5 சதவீத வாட் வரி மட்டும் இருந்தது. தற்போது கிலோ ₹58க்கு விற்பதோடு 18 சதவீத வரியும் உள்ளது. அதே போல் அலுமினியம் ஜிஎஸ்டிக்கு முன்பு ₹180 ஆகவும், தற்போது ₹230 ஆகவும், எஸ்எஸ் 304 மெட்டீரியல் முன்பு ₹160 ஆகவும், தற்போது ₹210 ஆகவும், பிராஸ் மெட்டீரியல் முன்பு ₹340 ஆகவும், தற்போது ₹480 ஆகவும், வார்ப்பு இரும்பு முன்பு ₹58 ஆகவும், தற்போது ₹75 ஆகவும் உள்ளது.  மூலப்பொருள் விலையேற்றம், 18 % ஜிஎஸ்டியால் குறுந்தொழில்களுக்கு நெருக்கடியை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மூலப்பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: