இந்திய பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை : ரகுராம் ராஜன் கருத்து

புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி போதுமான அளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கணிப்புகள் வெளிவருகின்றன. இதுதொடர்பாக அரசுக்கு எதிரான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள், உத்திகளை வரையறை செய்வதற்கான முயற்சியை பொருளாதார நிபுணர்களுடன் இணைந்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தொடங்கி வைத்தார். இந்த குழுவில் அபிஜித் பானர்ஜி, பிரன்ஜூல் பானர்ஜி, சஜித் சினோய், கீதா கோபிநாத், கார்த்திக் முரளிதரன் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர். இதில் ரகுராம் ராஜன் பேசியதாவது: இந்திய பொருளாதார வளர்ச்சி போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. ரயில்வே 90,000 பணியிடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். அவை ஒன்றும் அவ்வளவு சிறந்த வேலைகள் அல்ல. இதில் இருந்தே இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

 கடந்த 25 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம்தான் வளர்ந்துள்ளது என்பது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், சிலர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சிறப்பாக செயலாற்றுகின்றனர். சிலர் அவ்வாறு செய்வதில்லை. வேளாண் தொழில் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. இதற்கு ஏற்ப இதை ஈடு செய்யும் வகையில் அரசியல் கட்சியினர் வேளாண் கடன் தள்ளுபடிகளை அறிவிக்கின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்டதால் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: