×

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் : சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக கீழ்  நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை ேபாட்டுள்ளது உச்ச நீதிமன்றம்; இரட்டை இலை சின்னத்தைப்பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன், ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.   இதைத்தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கர்நாடகாவை சேர்ந்த டிடிவி.தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் பல்வேறு மாநிலங்களை சார்ந்த ஹவாலா புரோக்கர்களையும்  டெல்லி போலீசார் கைது செய்தனர். இதில், சுகேஷ் சந்திரசேகரை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

டெல்லி  சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கும் இந்த  வழக்கில், டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, பி.குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து  டிடிவி.தினகரனை தவிர மற்ற  மூன்று பேரும் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீ திமன்றம் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி விசாரிக்க உள்ளது. இதில் முதலாவதாக இரட்டை இலை வழக்கை ரத்து செய்யவோ அல்லது விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவோ முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந் நிலையில், பி.குமார் தரப்பில் ஐகோர்ட் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்ேகாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதை நீதிபதிகள் பானுமதி,  இந்திரா பானர்ஜி அமர்வு ் நேற்று விசாரித்தது. அப்போது,  “கீழ் நீதிமன்ற விசாரணைக்கு ஜனவரி மாதம் 29ம் தேதிவரை இடைக்கால தடை விதிப்பதாக  நீதிபதிகள்உத்தரவிட்டனர். இதனால், வரும் 17ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் நடக்க உள்ள சாட்சிகள் விசாரணையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்,உச்ச நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,trial ,CBI , Double leaf, bribery, CBI court trial, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...