தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவராக ராமராவ் நியமனம்

ஐதராபாத்:  தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி 88 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் இக்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், டிஆர்ஆஸ் தேசிய அரசியலில் இனி தீவிரமாக ஈடுபடும் என்று  அறிவித்தார். இந்நிலையில், மாநில முதல்வராக 2வது முறையாக சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து தனது மகனும் எம்எல்ஏ.வுமான ராமராவை கட்சியின் செயல் தலைவராக நேற்று நியமனம் செய்துள்ளார். ‘ராமாராவின் தலைமையில் கட்சி மேலும் வளர்ச்சியடையும் என நம்புகிறேன்’’ என அவர் கூறியுள்ளார். மகனிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ள சந்திரசேக ராவ், தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: