ரிசர்வ் வங்கியை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி : வைகோ புகார்

திருப்பரங்குன்றம்: மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசு, ரிசர்வ் வங்கியை கைப்பற்ற பார்க்கிறது என வைகோ குற்றம் சாட்டினார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ரிசர்வ் வங்கி  பணம் ₹3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மத்திய அரசு வாங்க நினைக்கிறது. அதற்காகத்தான் தகுதியற்ற நபரான சக்தி காந்ததாசை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்து தனது காரியத்தை சாதித்துக் கொள்ள மத்திய அரசு நினைக்கிறது. அதனால்தான் நிதித்துறைக்கு  சம்பந்தமில்லாத குருமூர்த்தி போன்றவர்களை, ரிசர்வ் வங்கியின் ஆலோசனை கமிட்டி இயக்குனராக நியமனம் செய்துள்ளனர்.

 நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. ரிசர்வ் வங்கி என்பது நாட்டின் கருவூலம். சுதந்திரம்  பெற்ற நாள் முதல் ரிசர்வ் வங்கியில் கை வைப்பதற்கு யாரும் துணியவில்லை. நரேந்திர மோடி, அமித்ஷா கூட்டம் நாட்டை காக்கும் கருவூலத்தில் கை வைக்க திட்டமிட்டு வருகிறது. நான்கு மாதத்திற்குள் அனைத்தையும் அழித்து விடவேண்டும் என்று நினைத்து விட்டனர். தேசிய கட்சிகள் உடனடியாக சுப்ரீம் கோர்ட் சென்று சக்திகாந்ததாஸ் நியமனத்தை தடுத்து நிறுத்தி புதிய இயக்குனர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். குறிப்பாக ரிசர்வ் வங்கியை காப்பாற்ற முடியும். செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி. இவ்வாறு தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: