×

ஜோலார்பேட்டையில் சாலையோரம் குவியலாக கிடந்த மண்டை ஓடுகள் : பொதுமக்கள் அச்சம்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே சாலையோரம் குவியலாக கிடந்த மண்டை ஓடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மண்டை ஓடுகளை அதிகாரிகள் குழி தோண்டி புதைத்தனர்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் செல்லும் வழியில் உள்ள வக்கணம்பட்டி சுடுகாடு அருகே நேற்று காலை அப்பகுதி மக்கள் சென்றனர். அப்போது சுடுகாட்டின் அருகே உள்ள சாலையின் இருபுறத்திலும் மூன்று இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், மாந்திரீக தகடுகளுடன்,  எலும்புத்துண்டு வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட தாயத்துக்களை மாலையாக  உருவாக்கி மண்டை ஓடுகளின் அருகே தேங்காய், மஞ்சள், குங்குமம்  போன்றவற்றுடன் பூஜை செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு கூட்டம் சேர்ந்ததால் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்த திருப்பத்தூர் டிஎஸ்பி ஜேசுராஜ், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தாசில்தார் சத்தியமூர்த்தி ஆகியோர் மண்டை ஓடுகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து அதிகாரிகள் சாலையோரம் கிடந்த மண்டை ஓடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், ‘மந்திரவாதிகள் ஊருக்கு ஏதேனும் கேடு விளைவிக்கும் வகையில்  மண்டை ஓடுகள் வைத்து பூஜையில் ஈடுபட்டு இருக்கலாம். அல்லது புதையல்  இருக்கும் இடத்தை கண்டறிய மண்டை ஓடுகளை வைத்து பூஜை செய்து இருக்கலாம்.  எனவே பொதுமக்களை அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மந்திரவாதிகள்  யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Jolarpettai , Skulls, jolarpettai, public fears
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி