×

அரசு வக்கீல் நியமனம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: அரசு வக்கீல் நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த வக்கீல் கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை  கிளையில் அரசு வக்கீல்களை நியமித்து கடந்த ஜன. 4ல் அரசாணை வெளியானது. இதில், உரிய தகுதியில்லாத பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு போதிய அனுபவம் இல்லை. குற்ற வழக்குகள் குறித்து முறையாக விசாரிக்காமல் அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு வக்கீல் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இவர் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், ‘‘சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் கூடுதல் குற்றவியல் வக்கீல்களை நியமித்து தமிழக அரசு கடந்த பிப். 27ல் அரசாணை வெளியிட்டது. போதிய தகுதி இல்லாத பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. குற்ற வழக்கு பின்னணி உடைய பலர், கூடுதல் குற்றவியல் வக்கீல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நியமனத்திற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 17க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai , Government Lawyer Appointments, Documents, Madurai Branch Branch
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...