ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரி மனு : ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த இளங்கோவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு அறிவிப்பு கடந்த 22.5.2013ல் வெளியானது. அதே ஆண்டு ஆக. 17 மற்றும் ஆக. 18ல் தேர்வுகள் நடந்தது. தொடர்ந்து கடந்த 2015-16ம் ஆண்டிற்கான 623 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பின்னடைவு காலியிடங்களுடன், அப்போதைக்கு காலியாக இருந்த இதர காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஏப்ரல் 2017ல் வெளியானது.

ஆன்லைன் முடிவுகள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. ஆனால், தேர்வாகாத ஒருவர் சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, இதற்காக கடந்த 2017ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜன. 7க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: