க.அன்பழகன் 97வது பிறந்த நாளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வீர் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 97வது பிறந்தநாளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வீர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கை:திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பேராசான் - தத்துவ வித்தகர் நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா -தலைவர் கலைஞரின் தலைமையினை ஏற்று இயக்கம் காப்பது ஒன்றே லட்சியம் என வாழ்பவர். அவருக்கு டிசம்பர் 19ம் நாளன்று 97வது பிறந்தநாள்.

கலைஞரைவிட வயதில் மூத்தவர் - தந்தை பெரியாரின் வாழ்நாளையும் கடந்து வாழ்பவர். கொள்கை வழி அண்ணனாக கலைஞருக்கு துணை நின்று, இன்று உங்களில் ஒருவனான எனக்கு, தந்தை நிலையிலிருந்து வழிகாட்டி வருபவர்.

பேராசிரியர் தனது பிறந்தநாள் விழாக்களை, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கஜா புயலின் தாக்கத்தாலும், தனது உடல்நிலை கருதியும் முழுமையாகத் தவிர்த்திட விரும்புவதால், அதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். கழக தலைவர் என்ற முறையில் என்னிடமும் அதனையே வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார்.

கழகத்தினர் ஏற்கனவே கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேராசிரியரின் பிறந்தநாளான டிசம்பர்-19 அன்று சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நலத்திட்ட உதவி செய்திட வேண்டுமெனவும் - நேரில் வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரில் உடல்நலம் குன்றியிருக்கும் பேராசிரியரை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: