டிடிவி.தினகரன் எடுபடாத பிராண்டு : அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

சென்னை: டிடிவி.தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு. எந்த அங்கீகாரமும் இல்லாதவர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி நிதி ₹2 கோடி செலவில் நவீன ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, நவீன ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதால் அதிமுகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவருடன் தொண்டர்கள் பெருமளவு செல்லவில்லை. டிடிவி.தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு. எந்த அங்கீகாரமும் இல்லாதவர். அவர் ஹைவோல்ட் மின்கம்பி என கூறிக் கொள்கிறார். அப்படி கூறுவது, அவருக்கே ஆபத்தாகும். அவர், ஹைவோல்ட் என்பதாலேயே அவருடன் யாரும் நிலையாக இருக்கவில்லை.

ஆனால் நாங்கள், 230 வோல்ட் கொண்ட பாதுகாப்பான மின்சாரம். எங்களுடன் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இப்போதும், எங்களுடன் இருக்கிறார்கள்.  230 வோல்ட் மின்சாரம் மட்டும் பயன்படுத்தவும், பாதுகாப்பானதுமாகும். ஆனால், ஹை வோல்ட் என கூறும் டிடிவி.தினகரன் எப்போதும் ஆபத்தானவர்தான்.தற்போது புயல் ஏற்பட உள்ளதாக ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களை கரைக்கு வரவழைத்துவிட்டோம். மீதம் உள்ளவர்களை அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: