×

கஜா பாதித்த பகுதி விவசாயிகளுக்கு தென்னம்பிள்ளை இலவசமாக வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:கஜா புயலால் தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. தற்போது அதிக விலைக்கு தனியார் மூலம் விற்கப்படும் தென்னம்பிள்ளையை வாங்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இச்சூழலில் தமிழக அரசு பாதிப்புக்கு உள்ளான தென்னை விவசாயிகளுக்கு தென்னம்பிள்ளை அதிகமாக கிடைக்கும் மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் வாங்கி அதனை இலவசமாக கொடுக்க முன்வர வேண்டும்.

மேலும் திருச்சி, கரூர் மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிட்ட வாழை கடுமையாக சேதமடைந்தது. எனவே ஒரு ஏக்கரில் வாழை உற்பத்திக்கு 3 லட்சம் செலவு செய்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக ஏக்கருக்கு 3 லட்சம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல்லுக்கும், மானாவாரி பயிர்களுக்கும் ₹ 30 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.எனவே தமிழக அரசு கஜா புயலின் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை - பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொடுக்க முன்வந்தால்தான் அவர்களால் தொடர்ந்து வாழ்க்கை வாழ்வதற்கு ஏதுவான சூழல் ஏற்படும். மேலும் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் பாதிக்கப்பட்ட பகுதியில் இயல்பு நிலை விரைவில் திரும்புவதற்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளை இன்னும் துரிதப்படுத்தி, வேகப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவிக்கரமாக இருந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GK Vasan ,area ,Ghazh , Tamil Manila Congress, GK Vasan, tennampillai
× RELATED தூத்துக்குடி தமாகா வேட்பாளர் நாளை...