நாட்டின் காவலன் என்று கூறிய பிரதமர் மோடி ரஃபேல் விவகாரத்தில் திருடனாகிவிட்டார்: ராகுல் காந்தி புகார்

டெல்லி: ரஃபேல் உதிரிபாக தயாரிப்பு ஒப்பந்தத்தில் எச்.ஏ.எல்-ஐ சேர்க்காதது ஏன்? என காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அனில் அம்பானியின் நிறுவனத்தை போர் தயாரிப்பில் கூட்டு சேர்த்தது ஏன்? எனவும் கேள்வி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். செய்தியாளர் முன் அம்பலப்பட்டு விடுவோமோ என்று பிரதமருக்கு அச்சம் என்றும் ரபேல் விமானத்தின் விலை உயர்த்தப்பட்டது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரான்சில் என்ன நடந்தது என்பது பிரதமருக்கு மட்டுமே தெரியும் என்றும் நாட்டின் காவலன் என்று கூறிய பிரதமர் மோடி திருடனாகிவிட்டார் என ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.

ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30,000 கோடி கையாடல் நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ரஃபேல் பற்றி தலைமை கணக்காயர் அறிக்கையை ஏன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் ரஃபேல் விமான ஒப்பந்த விவரங்களை சி.ஏ.ஜி.க்கு கூட தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். ரஃபேல் போர் விமான பேரத்தை விசாரிக்க ஜே.பி.சி குழு அமைக்க தயக்கம் ஏன்? ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .பொது கணக்கு குழுவுக்கே ரஃபேல் ஒப்பந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: