எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக 1.56 கோடி மோசடி செய்தவர் கைது

சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதி, வைராசப்பட்டினத்தை சேர்ந்த சுந்தரம் (50) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கூறினார். அதன்படி, நான் தவணை முறையில் அவரிடம் 1.56  கோடி பணம் கொடுத்ேதன். ஆனால் சொன்னபடி சுப்பிரமணி எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டால் மிரட்டினார் என்று புகாரில் கூறியிருந்தார்.அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை சாலிகிராமம் திலகர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக சுந்தரத்திடம் 1.56 கோடி பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் சுப்பிரமணியை  அவரது வீட்டில் கைது  செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: