×

சென்னையில் 50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணிக்க காவல்துறை திட்டம்

சென்னை: சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.சமீபத்தில் சூளைமேடு காவல் நிலையம் சார்பில் சவுராஷ்டிரா நகரில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் சிசிடிவி கேமரா குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் 200 கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். நுங்கம்பாக்கம் கமிஷனர் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு 50 மீ இடை வெளிக்கும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், சூளைமேடு, ஆயிரம்விளக்கு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எத்தனை கேமராக்கள் தேவை என்பதும் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி ஆயிரம்விளக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 308 சிசிடிவி கேமராக்கள் தேவைபடுவதாகவும் தற்போது வரை 208 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதிக்குள் ஆயிரம்விளக்கு பகுதியில் சிசிடிவி கேமரா முழுமையாக பொருத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து  மீதமுள்ள கேமராக்கள் ஜன 31 குள் முழுமையாக அமைக்கப்படும் என்று கூறியுள்ளனர். சென்னையில் 50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணிக்க பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் சென்னை முழுவதும் சுமார் 3 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து சீரமைப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் வரை 45 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் நடவடிக்கையின் பேரில் தற்போது 1 லட்சத்து 60 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே துரித செயல்பாட்டின் மூலம் 3 லட்சம் கேமராக்களை பொருத்த காவல்துறையினர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Chennai, CCTV camera, surveillance, police plan
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...