×

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க கால அவகாசம் கோரிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்

சென்னை: தமிழகத்தில் அவரும் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வுக்கான வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வரும் 1 ஆம் தேதி முதல் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வர இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் எந்தந்த பிளாஸ்டிக் பொருட்டுகள் பயன்படுத்த தடை என்பதை அரசு தெளிவாக அறிவிக்காததால் வணிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சர்வதேச நிறுவனங்கள் உற்பத்தி செய்ய கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர் வணிகர்கள்.

இதையடுத்து 2020 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாத நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதை போல் தமிழக அரசும் கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 6 மாத அவகாசத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல் படுத்துவது சாத்தியம் இல்லாதது என குறிப்பிடும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அதிக முதலீடு செய்து பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளனர். அரசு பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க கால அவகாசம் வழங்கினால் யாரும் பாதிக்காத வகையில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட முடியும் என வணிகர்களும், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களும் கூறியுள்ளனர்.       


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Plastics manufacturers , Plastic, barrier, state government, plastic manufacturers, time limit
× RELATED பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடையடைப்பு போராட்டம்