சென்னை அருகே தனியார் தொழிற்சாலை நிர்வாகம் முன் மகனுடன் பெற்றோர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உடல் உறுப்புக்கள் செயல் இழந்த மகனின் சிகிச்சை செலவை அளிக்க தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மறுத்ததை அடுத்து மகனுடன் பெற்றோர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலாஜி நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏ.சி மெக்கானிக் வெல்டிங் பிரிவில் 5 ஆண்டுகளாக விக்னேஷ் என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். ஓராண்டு முன் விக்னேஷ் பணியின் போது தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதுகு தண்டு மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயல் இழந்துள்ளது. அதனால் அவர் தற்போது படுத்த படுக்கையாக உள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அவரை காப்பாற்ற சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர் பணிபுரிந்த தொழிற்சாலை நிர்வாகத்திடம் சிகிச்சை செலவுக்கு உதவி கேட்ட போது அவரின் மருத்துவ செலவை ஏற்க தொழிற்சாலை நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த விக்னேஷின் பெற்றோர் தங்கள் மகனை கருணை கொலை செய்யக்கோரி படுக்கையில் கிடந்த விக்னேஷ் உடன் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரின் இப்பாச போராட்டம் காண்போரை கண் கலங்கவைத்தது. இதைத்தொடர்ந்து போலீசாரிடம் பேசிய பெற்றோர் மகன் பணிபுரிந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகம் அவரது சிகிச்சை செலவுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: