×

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..... அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 12 மணி நேரத்தில் இது தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும். தமிழக தென்கிழக்கு வங்கக்கடல்-மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : atmosphere ,Bay of Bengal , Air Pressure, Storm, Indian Weather Center, Heavy Rain
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...