ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில், 5 மணி நேர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் ரயில்கள் இயக்கத்தில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில், காலை 11 மணி முதல், மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி  நடக்கிறது. இதனால் ரயில்கள் இயக்கத்தில் இன்றும், நாளையும் மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ராமேஸ்வரம்-மந்தாதி வாராந்திர ரயில் வழக்கமான நேரத்தை விட, 40 நிமிடம் தாமதமாக எக்மோர் வந்தடையும். மதுரையில் இருந்து காலை, 7 மணிக்கு சென்னைக்கு புறப்படும் ரயில், 40 நிமிடம் தாமதமாக எழும்பூர் வந்தடையும். மேல்மருத்தூரில் இருந்து, 3:30க்கு சென்னை பீச்சுக்கு புறப்படும் ரயில், சென்னை எழும்பூருக்கு, 40 நிமிடம் தாமதமாக வந்தடையும். சென்னையில் இருந்து மதியம், 1:40க்கு மதுரைக்கு புறப்படும் ரயில் விழுப்புரத்தில் இருந்து, 40 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல், நாளை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வரும் சேது வாராந்தி ரயில், வழக்கமான நேரத்தைவிட 40 நிமிடம் தாமதமாக எழும்பூர் வந்தடையும். மதுரையில் இருந்து காலை, 7 மணிக்கு சென்னைக்கு புறப்படும் ரயில், 40 நிமிடம் தாமதமாக எழும்பூர் வந்தடையும். விழுப்புரத்தில் இருந்து மதியம் 1:55க்கு மேல்மருவத்தூருக்கு புறப்படும் ரயில், 40 நிமிடம் தாமதமாக வந்தடையும். மேல்மருத்தூரில் இருந்து மாலை, 3:30க்கு சென்னை பீச்சுக்கு புறப்படும் ரயில், சென்னை எழும்பூருக்கு, 40 நிமிடம் தாமதமாக வந்தடையும்.  மேல்மருத்தூரில் இருந்து காலை 11:30க்கு விழுப்புரத்திற்கு புறப்படும் ரயில், 40 நிமிடம் தாமதமாக சென்றடையம். சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1:40 க்கு மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரத்துக்கு 40 நிமிடம் தாமதமாக சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: