‘‘எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை’’ கடிதம் எழுதி வைத்துவிட்டு தம்பதி தூக்கிட்டு தற்கொலை: திருமணமான 5 மாதத்தில் சோகம்

சென்னை: மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சாரதி (35). தனியார் சூப்பர் மார்கெட்டில் மேலாளராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி பிரசாந்தி (21). தம்பதிக்கு 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. தற்போது சாந்தி 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை சாரதி வீட்டுக்கு வந்த அவர் சகோதரர் மணிபாலன் கதவை பலமுறை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதையடுத்து, மணிபாலன் ஜன்னலை திறந்து பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கில் சடலமாக கிடந்தனர். இதை பார்த்து அதிச்சி அடைந்த மணிபாலன் உடனடியாக மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாரதி, பிரசாந்தி சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசா வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சாரதியின் தாயார் லலிதா கடந்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறந்து உள்ளார். இதனால், சாரதி கடும் மனவேதனையில் இருந்துள்ளார். இதை தனது மனைவியிடம் பலமுறை கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இந்த விஷயம் தெரிந்த பிரசாந்தி கணவர் இல்லாத உலகில் தானும் வாழ விரும்பவில்லை என்று கூறி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த வீட்டில் கணவன் மனைவி எழுதியுள்ள உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதில், ‘எங்கள் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. இது நாங்களே எடுத்த முடிவு’ என்றும் எங்கள் ஈமசடங்கிற்கான செலவினை எங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலவிடும்படியும் அதில் கூறப்பட்டிருந்த்து.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: