8 மாதத்தில் 12,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு : வரிகள் ஆணைய அதிகாரி தகவல்

புதுடெல்லி: கடந்த 8 மாதங்களில் 12,000 ஜிஎஸ்டி ஏய்ப்பை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது என வரிகள் ஆணைய அதிகாரி தெரிவித்தார். ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதில் வரி ஏய்ப்பு முறைகேடுகளை தடுக்க இ-வே பில் கொண்டு வரப்பட்ட பிறகும், வரி ஏய்ப்பு தொடர்ந்து வரகிறது.  இதுதொடர்பாக மத்திய அரசு உத்தரவுப்படி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர் இதன்பலனாக வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அசோசெம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நேரடி வரிகள் ஆணைய உறுப்பினர் ஜான் ஜோசப் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வரி ஏய்ப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டோம். இதன் பலனாக ஏப்ரல் முதல் நவம்பர் வரை 12,000 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கலால் மற்றும் சேவை வரி ஏய்ப்பை விட இது அதிகம்.  வரிகள் ஆணையம் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து மோசடி செய்யப்பட்ட 8,000 கோடி மதிப்பிலான வரிகளை அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர். ஜிஎஸ்டியில் இணைந்துள்ள 1.2 கோடி பேரில் 5 முதல் 10 சதவீதம் பேர் வரி மோசடி செய்துள்ளனர். இது அவர்களது தொழில் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தந்துள்ளது. வரி மோசடிகளை தடுக்க புதிய வழிகளை புகுத்த வேண்டியுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: