கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஏப்ரலில் சீராய்வு

துபாய்: கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது தொடர்பாக வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் கூட்டத்தில் மீண்டும் சீராய்வு செய்யப்படும் என ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சர் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபரில் உச்சபட்ச அளவாக பேரல் 85 டாலர் என இருந்தது. இது தற்போது பேரல் 60 டாலராக குறைந்து விட்டது. இதை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதன் மூலம் விலையை அதிகரிக்க கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகள் கூட்டமைப்பு மற்றும் இந்த அமைப்பு சாராத எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தின. இதில் ஜனவரி முதல் 6 மாதத்துக்கு நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் பேரல் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இது பற்றி ஏப்ரலில் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என ஐக்கிய அரபு எமிரேட் சுகைல் அல் மஸ்ரோயி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: