மத்திய அரசுக்கு ஒத்துழைப்போம் ரிசர்வ் வங்கியின் கவுரவம் காக்கப்படும்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக, சக்தி காந்ததாஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பொருளாதார விவகார செயலாளராக செயலாளராக இருந்த சக்தி காந்ததாசை புதிய கவர்னராக நியமித்து மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக சக்தி காந்ததாஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டேன். என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், சக்தி காந்ததாஸ் ரிசர்வ் வங்கியின் மிக உயர்ந்த இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரி’’ என்றார். அதேநேரத்தில், புதிய கவர்னர் முன்பு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

ரிசர்வ் வங்கி கவர்னராக நேற்று பொறுப்பேற்ற சக்தி காந்ததாஸ் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்து ஆராய விரும்பவில்லை. நிதிக்கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி செயல்படும். சிக்கலான விஷயங்களில் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். பொருளாதார முடிவுகளை எடுப்பதி–்ல சிக்கலான காலக்கட்டம் நிலவுகிறது. அதேநேரத்தில், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம்,  கவுரவம் காக்கப்படும். பணப்புழக்கம் தொடர்பாக முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். பொதுத்துறை வங்கி, தனியார் வங்கிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

ரேகை வைக்க சொன்னவர்

* பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் சக்திகாந்ததாஸ் பங்களிப்பு முக்கியமானது.

* அப்போது செல்லாத நோட்டை வங்கிகளில் மாற்றுவதில் முறைகேட்டை தடுக்க ரேகை வைக்க வேண்டும் என்று சொன்னவர் இவர்.

* பணமதிப்பு நீக்கத்துக்கு பின்பு வெளியான ஒரு ரூபாய் நோட்டில், பொருளாதார விவகார செயலாளர் என்ற வகையில் இவர் கையெழுத்து இடம்பெற்றிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: