அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன திருமண மோதிரம் திரும்ப கிடைத்ததால் பெண் மகிழ்ச்சி

நியூ ஜெர்சி: அமெரிக்காவில் கழிவறையில் விழுந்து தொலைந்து போன திருமண மோதிரம் ஒன்று 9 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைத்ததால் பெண் ஒருவர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். நியூ ஜெர்சியை சேர்ந்த பவுலா ஸ்டாண்டன் எனும் 60 வயது பெண்மணியே வைரம் பதிந்த மோதிரத்தை தொலைத்தவர். அந்த மோதிரம் தமது 20-வது திருமண ஆண்டு விழாவில் அவரது கணவன் மைக்கேல் பரிசாக வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு ஒருநாள் கழிவறையை சுத்தம் செய்த போது தவறுதலாக அவரது மோதிரம் கழிவறையில் விழுந்து விட்டது என அவர் தெரிவித்தார். அதன் பின் மோதிரத்தை தேடும் முயற்சி அனைத்தும் வீணாகியதால் அதனை அப்படியே விட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது கணவர் வேறு ஒரு மோதிரத்தை பரிசளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் உள்ளூர் பொதுப்பணித்துறை துறையினர் ஸ்டாண்டன் வீட்டிற்கு அருகே ஒரு சாக்கடையில் துப்புரவு வேலையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாக்கடையில் ஒரு மினுமினுப்பான மோதிரத்தை கண்டனர். ஸ்டாண்டன் கணவர் ஏற்கனவே இதுகுறித்து அவர்களிடம் பலமுறை புகார் தெரிவித்திருந்ததால் அவர்கள் அந்த மோதிரத்தை எடுத்து கொண்டு பவுலாவிடம் கொடுத்துள்ளனர்.

மோதிரத்தை கண்டதும் அது தொலைந்த அவரது மோதிரம் என பவுலா உறுதி செய்தார். தொலைந்த மோதிரம் 9 ஆண்டுகள் கழித்து தற்போது திரும்ப கிடைத்ததை தனது உறவினர்களிடம் சொன்ன போது அதை யாரும் நம்பவில்லை எனவும் பின்பு உண்மை என தெரிந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் என்றும் பவுலா ஸ்டாண்டன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: