முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் 2வது நாளாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி நீடித்து வந்த பதற்றம் ஓய்ந்ததால், வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து 35 ஆயிரத்து 779 புள்ளிகளில் முடிவடைந்தது.

நிப்டி 188 புள்ளிகள் அதிகரித்து 10 ஆயிரத்து 737 புள்ளிகளில் நிறைவுற்றது. நிப்டி இன்டெக்சில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்பட 46 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து 71 ரூபாய் 92 காசுகள் இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: