×

காற்றின் தரத்தை அறிந்து வெளியில் செல்வது தொடர்பாக திட்டமிடுங்கள் : சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: மக்கள் தங்கள் பகுதியில் காற்றின் தரத்தை அறிந்து வெளியில் செல்வது தொடர்பாக திட்டமிடுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நகர்புறங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முந்தைய காலங்களில் தொழிற்சாலைகளால் மட்டுமே காற்று மாசு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது வீட்டுக்-கு 2 முதல் 3 இருசக்கர வாகனங்கள் உள்ளன. அதிகரித்து வரும் வாகனங்களின் பெருக்கம், பராமரிப்பில்லாத, காலாவதியான வாகனங்களை இயக்குவது நிறைய மாசு உருவாகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் அடர்ந்த புகை, சாலையில் மண் இல்லாதவாறு பராமரிக்கத் தவறுவது உள்ளிட்ட பல காரணங்களால் நகர்புறங்களில் புழுதியும், காற்று மாசும் மிகுந்து காணப்படுகிறது

மத்திய சுகாதார அமைச்சகம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் https://app.cpcbccr.com/AQI_India  என்ற இணையதளம் மூலம் தங்கள் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை அறிந்து கெண்ட பின் மக்கள் வெளியே செல்வது பற்றி திட்டமிட அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் காற்றின் தரம் எவ்வாறு உள்ளது என்று பார்வையிட்டபோது, காற்றின் தரம் மணலி மற்றும் ஆலுந்தூர் பகுதிகளில் மோசமான நிலையில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி மணலியில் 2.5 மைக்ரோ மீட்டர் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் மிக நுண்ணிய துகள்கள், ஒரு கனமீட்டர் காற்றில் அதிகபட்சமாக 334 மைக்ரோகிராமாக இருந்தது.

ஆலந்தூரில் 305 மைக்ரோகிராமாக இருந்தது. இந்த நுண்ணிய துகள்கள், ஒரு கனமீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் அளவு இருப் பதுதான் அனுமதிக்கப்பட்ட அளவா கும். இப்பகுதிகளில் சுமார் 5 மடங்கு காற்று மாசு அதிகமாக உள்ளது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, “மணலி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து தடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ministry of Health, Wind quality, instruction
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...