×

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 15, 16-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் கடலோர பகுதிகளில்  டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது டிச.15ம்  தேதி ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் டிச.13ம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும், டிச.14ல் தென்மேற்கு கடலின் மத்திய பகுதிக்கும், டிச.,15ல் தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rainfall ,areas ,Tamil Nadu , Heavy rain, Chennai, weather center, fishermen,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...