இறந்த யானையின் தந்தம் வெட்டி கடத்தல்: 2 பேர் கைது

கம்பம்: தமிழக எல்லை குமுளி ரோசாப்பூகண்டம் பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி, பிளாஸ்டிக் சாக்குப்பையுடன் திரிவதாக கேரள வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ரேஞ்சர் அனுராஜ் தலைமையிலான வனத்துறையினர், இருவரையும் பிடித்து சாக்குப்பையை சோதனையிட்டனர். அதில் 10 கிலோ எடை கொண்ட நான்கு துண்டுகளாக்கப்பட்ட 2 யானை தந்தங்கள் இருந்தன. விசாரணையில், இருவரும் கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த கங்கா(37), பிரபு(34) என ெதரிந்தது. மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட உடுப்பு ஓடை அருகே, மின்சாரம் தாக்கி இறந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து, குமுளியில் உள்ள பாபு மூலம் விற்பனை செய்ய கொண்டு சென்றபோது பிடிபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடம் தமிழக பகுதி என்பதால், கேரள வனத்துறையினர், கம்பம்  வனத்துறையினரிடம் யானை தந்தங்கள் மற்றும் இருவரையும் ஒப்படைத்தனர். இதன்பிறகு மின்சாரம் தாக்கி இறந்த யானையை அதிகாரிகள்  பார்வையிட்டனர். அது இறந்து சுமார் 5 நாட்கள் ஆகிவிட்டது; 22 முதல் 25 வயது இருக்கும் என்று தெரியவந்தது.  யானையின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் இன்று அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: