25 ஆயிரத்தில் கிடைக்கிறது ஸ்மார்ட் போனை மறந்தால் எச்சரிக்கை தரும் ஜாக்கெட்

புதுடெல்லி: ஸ்மார்ட் போன்களை மறந்து வைத்துவிட்டு செல்லும் நபர்களின் வசதிக்காக எச்சரிக்கை தரும் வகையிலான ஜாக்கெட்டை கூகுள் நிறுவனம் ரூ.25,000க்கு அறிமுகப்படுத்தி உள்ளது. நம் வாழ்வுடன் ஒன்றிணைந்துவிட்ட செல்போன்களை மறதியாக வைத்துவிட்டு தேடுவது பலரது வாழ்வில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. எப்போதும் பயணம் செய்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். உங்களுக்கு எச்சரிக்கை தருவதற்காகவே கூகுள் ஜாக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் லேவிஸ் செல்போன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஜாக்கெட் 25,000க்கு கிடைக்கிறது.

இந்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டால் இனி ஸ்மார்ட் போன்களை நீங்கள் மறந்து விட்டு செல்லமாட்டீர்கள். உங்கள் போனும் ஜாக்கெட்டும் எப்போதும் உங்களுடனேயே பயணிக்கும். ஒருவேளை நீங்கள் ஜாக்கெட்டைவிட்டு சென்றால் போனில் எச்சரிக்கை செய்தி வரும். அதே நேரத்தில் ஜாக்கெட்டில் ஒளியுடன் கூடிய வைபிரேஷன் தந்து நீங்கள் போனை விட்டுச்செல்வதை எச்சரிக்கை செய்யும். இந்த ஜாக்கெட் இருந்தால் நீங்கள் இசை கேட்டு மகிழலாம். இது தவிர போன் அழைப்பு வந்தால் யாரிடம் இருந்து வருகிறது, செய்தி யார் அனுப்புகிறார்கள் என்ற விவரத்தையும் அறியலாம். ஜாக்கெட்டின் கையில் பொத்தான் அளவுக்கு உள்ள இந்த பட்டனில் நூல் போன்ற அமைப்பு இணைக்கப்பட்டிருக்கும். இதை அணிந்து கொண்டதும் ஏற்படும் அழுத்தம் மூலம் எச்சரிக்கை செய்தி செல்போனை சென்றடையும். இந்த ஜாக்கெட்டுகளை லேவிஸ் இணையதளம் மற்றும் அந்த நிறுவனத்தின் கடைகளில் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: