சிவகங்கையில் ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்குள் புகுந்து திட்ட இயக்குனரை மிரட்டிய அமமுக செயலாளர் கைது: ஊழியர்கள் தர்ணா போராட்டம்

சிவகங்கை: சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரை அலுவலகத்திற்குள் புகுந்து, மிரட்டிய அமமுக மாவட்ட செயலாளர் கைதானார். மிரட்டல் சம்பவத்தை கண்டித்து ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளது. திட்ட இயக்குனராக வடிவேல் பணியாற்றி வருகிறார். நேற்று பிற்பகல் திட்ட இயக்குனர் அறைக்குள் அமமுக மாவட்ட செயலாளர் உமாதேவன் மற்றும் சில நிர்வாகிகள் புகுந்தனர். அங்கு திட்ட இயக்குனரிடம் நபார்டு வேலை தொடர்பாக பேசிய உமாதேவன், தான் கூறிய நபருக்கு வேலை வழங்கப்படாதது குறித்து கண்டித்துள்ளார்.பின்னர் மிரட்டும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்குள்ள ஊழியர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் திட்ட இயக்குனர் மற்றும் அறையில் இருந்த அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அறைக்குள் உமாதேவன் இருந்த நிலையில், ஊழியர்கள் அறையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் பரவியதும் அமமுகவினர் அங்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை டிஎஸ்பி அப்துல்கபூர், டவுன் இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் அறைக்குள் இருந்து உமாதேவனை டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். உமாதேவனை கண்டித்து எஸ்.புதூர், கல்லல், சிவகங்கை கலெக்டர் அலுவலகம் என மாவட்டம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து கலெக்டரிடம் அரசு ஊழியர்கள் புகார் மனு அளித்தனர்.பின்னர் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ராதாகிருஷ்ணன், சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். இதன்பேரில் அமமுக மாவட்ட செயலாளர் உமாதேவன், துணை செயலாளர் மேபல் ராஜேந்திரன் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் உமாதேவனை கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: