பஸ் மீது வெடிகுண்டு வீச்சு வழக்கு கிச்சான் புகாரி உள்ளிட்ட 10 பேர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்

நெல்லை: பஸ் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் கிச்சான்புகாரி உள்ளிட்ட 10 பேர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கிச்சான்புகாரி மற்றும் பறவை பாதுஷா. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் மீது பெங்களூர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 22.9.12 அன்று பாளையங்ேகாட்டை டக்கரம்மாள்புரம் அருகே பஸ் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் கிச்சான் புகாரி, பறவை பாதுஷா, பாளை ரபீக் உள்ளிட்ட 10 பேர் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 3வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி பெங்களூர் சிறையில் இருந்து கிச்சான்புகாரி, பறவை பாதுஷா உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் நெல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் நெல்லை மாவட்ட 3வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஜெயராஜ், வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து கிச்சான் புகாரி உள்ளிட்டோர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: