சட்டசபை தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தை கடும் தள்ளாட்டம்

* நிதி, ஆட்டோமொபைல் பெரும் இழப்பு

* ஐடி, பார்மா நிறுவனங்கள் தப்பின

மும்பை: நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் திடீரென பதவி விலகியதால் பங்குச்சந்ைதயில் ெபரும் இழப்புகள்; ரூபாய் மதிப்பிலும் சரிவு. நேற்று 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் பங்கு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மும்பை பங்குச்சந்தை ேநற்று வர்த்தகம் துவங்கிய ஆரம்பத்தில் 533 பாயின்ட்கள் சரிந்தன.  அதன் பின் ஓரளவு சில பங்குகள் விஷயத்தில் மீட்சி காணப்பட்டது. பாஜ ஆளும் சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது என்று தகவல்கள் பரவியதும், பங்குச்சந்தை 34892.43ல் வர்த்தகம் துவங்கியது,  அடுத்த சில நிமிடங்களில் 67.29 பாயின்ட்கள் சரிந்துவிட்டன.

தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் 10,482.35 ல் 6.10 பாயின்ட்கள் சரிந்தன. போகப்போக 150 பாயின்ட்கள் வரை சரிந்தன. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை 50 நிறுவன பங்குகள் பெரும் இழப்பை சந்தித்தன. பாரத் பெட்ரோலியம், எச்டிஎப்சி போன்றவற்றின் பங்குகள் சரிந்தன. ெமாத்தத்தில் இழப்பு என்று பார்த்தால் நிதி மற்றும்  ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளுக்கு தான். சரிவு காணப்பட்டாலும், பார்மா, ஐடி நிறுவனங்களின் பங்குகள் சமாளித்து விட்டன.   ‘ரிசர்வ் வங்கியின் கவர்னர் திடீர் விலகல் என்பது பெரும் அதிர்ச்சி அலையை பங்கு சந்தையில் ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு அன்று மாலையே கருத்துகணிப்பில் காங்கிரஸ் தான் அதிக மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்  என்று வந்ததால் அப்போதில் இருந்தே பங்குச்சந்தை சற்று தள்ளாட்டமாக இருந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று தேர்தல் முடிவுகள் வந்ததை அடுத்து, பங்குச்சந்தையில்  அதிக தள்ளாட்டம் காணப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: